Set back by Supreme Court decision : உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு: சமூகநீதியை வெல்ல தொடர்ந்து நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: Continued action to win social justice : உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமூகநீதியை வெல்ல தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக‌ முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் (A statement issued by Tamil Nadu Chief Minister M.K.Stalin) தெரிவித்துள்ளதாவது : பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஒன்றிய பாஐக அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது.

இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது (Today’s verdict is a setback in the century-long struggle for social justice). எனினும் , தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவெடுக்கப்படும்.

குறித்து சமூக நீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித் திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று (Like-minded organizations should unite) கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.