Extension of scholarship deadline: சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு

சேலம்: Extension of scholarship deadline for Minorities students. சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டய படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் (புதியது மற்றும் புதுப்பித்தல்) 9-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவியர்களுக்கு மட்டும் பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகையும் ஒன்றிய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ண ப்பிப்பதற்கான காலக்கெடுநீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15.1.2022 மற்றும் பள்ளி மேற்படிப்பு, தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 30.11.2022 இறுதி நாளாகும்.

எனவே, தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 110-இல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427-2451333 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.