10th, 11th, 12th Public Exam Schedule Release : நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Tamil Nadu School Education Minister Anbil Mahesh) இன்று வெளியிட்டார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 8.8 லட்சம் பேர் எழுதுகிறார்கள் (Around 8.8 lakh people appear for the class 12 exam).

மேலும், தமிழகத்தில் தற்போது 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்வை சுமார் 8.50 லட்சம் பேர்  எழுதுகிறார்கள். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் பேர்  எழுதுகிறார்கள். ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம் (Public examinations are usually held in the months of March and April). தேர்வு முடிவுகள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் வெளியாகி பிறகு மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கும்.

அந்த வகையில், 2022 23 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுள்ளார். தேர்வு அட்டவணை இன்று வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் தொடங்கியிருக்கிறார்கள் (Teachers have started the preparation work for the public examination). மாணவர்களுக்கும் தேர்வு அட்டவணை வெளியானதும் பொறுப்புடன் பாடங்களைப் படிக்கத் தொடங்குவதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.