Former Chairman of Tata Sons dies in accident: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழப்பு

மும்பபை: Former Chairman of Tata Sons Cyrus Mistry dies in road accident in Mumbai. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை பால்காரில் கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மெர்சிடிஸ் காரில் மிஸ்திரி சென்று கொண்டிருந்தார்.

பிற்பகல் 3.15 மணியளவில் குஜராத்தில் இருந்து மெர்சிடிஸ் காரில் மிஸ்திரி மற்றும் மூன்று பேர் மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது போல் தெரிகிறது. விபத்தில் காயமடைந்த பெண் ஒருவரே வாகனத்தை ஓட்டியுளார் எனவும், அவர் வாபியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிஸ்திரியைத் தவிர, இறந்த மற்றொருவர் ஜஹாங்கீர் தின்ஷா பந்தோல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த அனயாதா பந்தோல் மற்றும் டேரியஸ் பண்டோல் ஆகியோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மறைவு குறித்து அதிர்ச்சியடைந்தேன். அவர் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மட்டுமல்லாமல், தொழில்துறையில் இளம், பிரகாசமான மற்றும் தொலைநோக்கு ஆளுமையாக காணப்பட்டார். இது ஒரு பெரிய இழப்பு… எனது இதயப்பூர்வமான அஞ்சலி. ,” என்றார் முதல்வர் ஷிண்டே.