Rahul Gandhi : பிரதமர் நரேந்திரமோடியின் தவறான கொள்கையினால் பொருளாதாரம் சீரழிவு: ராகுல்காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக‌ அரசு செய்ய வேண்டியவற்றை செய்யாமல் உள்ளது. செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்து வருகிறது

தில்லி: Prime Minister Narendra Modi’s misguided policies have led to economic collapse : பிரதமர் நரேந்திரமோடியின் தவறான கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் (Delhi Ramlila Maidan) ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று அவர் பேசியது: பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. நாட்டை வீழ்ச்சியின் விளிம்புக்கு தள்ளிய மோடியை வீழ்த்தியே தீருவோம் என்று சூளுரைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக‌ அரசு செய்ய வேண்டியவற்றை செய்யாமல் உள்ளது. செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்து வருகிறது என்றார்.

விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி (Inflation, unemployment, GST on essential goods) உயர்வு உள்ளிட்ட வற்றை கண்டித்தும், வகுப்பு வாத நல்லிணகத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை பயணத்தை செப். 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி தலைமையில் தொடங்குகிறது. சுமார் 3,500 கி.மீ தூரம் காஷ்மீர் வரை காங்கிரஸார் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். மக்களை நேரடியாக அணுகவும் இந்த பாத யாத்திரையின் போது அடிமட்டத்தில் உள்ள சாதாரண மக்களிடம் நாட்டின் பிரச்னைகளை கொண்டு செல்லும் விதமாக காங்கிரஸ் கட்சி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த முன்னெடுப்பிற்கு கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பதா?, வேண்டாமா ? என்பதனை ராகுல்காந்தி முடிவு செய்ய உள்ளார். இந்த பாத யாத்திரை மகத்தான வெற்றி பெற்றால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்பது உறுதி (If the Pada Yatra is a huge success, Rahul Gandhi is sure to take over the post of Congress President). எனவே பாத யாத்திரையின் வெற்றிக்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.