Farmers Protest Again In Delhi: டெல்லியில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒரு லட்சம் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: குறைந்தபட்சமாக ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் (Farmers Protest Again In Delhi) விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதன்படி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளதாக பாரதிய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் பிரச்சாரத் தலைவர் ராகவேந்திர படேல் கூறியிருப்பதாவது: விவசாயிகள் பல்வேறு வகையிலான துன்பங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அவர்களின் துன்பங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 20,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாத யாத்திரையாக சென்றுள்ளோம். 13,000 கிலோ மீட்டருக்கு சைக்கிள் பேரணியும் நடத்தியிருக்கோம். அது மட்டுமின்றி மாநிலங்களில் முக்கியமான இடங்களில் மிகப்பெரிய பொதுக்கூட்டங்களையும் நடத்தியிருக்கோம். அது அனைத்தும் முடிந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஒன்றாக இணைந்துள்ளோம்.

அரசுக்கு 4 வகையிலான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். அதன்படி குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்களில் அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

இரண்டாவது அனைத்து வகையிலான விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

மூன்றாவது மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு கொடுத்து வரும் ரூ.6,000 போதுமானவை இல்லை. அதனை உயர்த்த வேண்டும்.

நான்காவது மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனை மத்திய அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு போராட்டங்களை முன்வைத்துள்ளோம். இவ்வாறு அந்த இயக்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Pondicherry Admk Anbazagan Accusation: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வராமல் இருப்பதற்கு காரணம் நாராயணசாமி: அன்பழகன் குற்றச்சாட்டு

முந்தைய செய்தியை பார்க்க:Cant Sleep Peacefully Due To Sound Of Chickens Crowing: அதிகாலையில் கூவும் கோழியால் தூக்கம் போச்சு: ஐ.டி. ஊழியர் காவல் நிலையத்தில் புகார்