Dr. Ramadoss : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: Dr. Ramadoss Urge to reduce the price of petrol and diesel : உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வரு கின்றன. விலைவாசி உயர்வால், ம‌க்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எரி பொருள் விலையை குறைக்காமல் மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையில் க‌ச்சா எண்ணெய் விலை உயர்த்தாலும் மக்கள் பாதிப்பை குறைக்கும் கையில் ஏப்ரல் மாதம் 6 ஆம்தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் ஏற்பட்ட இழப்பை எண்ணெய் நிறுவ வங்கள் ஏற்றுக் கொண்டன என்பது உன்மைதான். ஆனால் ஜூன், ஜூலை மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையத் தொடங்கிய (crude oil prices started falling) நிலையில், ஏப்ர‌ல், ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட இரழப்பை ஈடு கட்டும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை. அதன் மூலம் கிடைத்த லாபத்தால், முந்தைய மாதங்களில் ஏற்பட்ட இழப்பும் ஈடுகட்டப்பட்டுவிட்டது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதை மக்களுக்கு வழங்கும் நோக்குடன், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் லிட்டருக்கு 40 காசுகள் குறைப்பதன் மூலம் நாட்களில் லிட்டருக்கு ரூ. 2 குறைக்க முடிவு செய்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அந்த முடிவை எண்ணெய் நிறுவனங்கள் கைவிட்டு விட்டன. அதற்கான காரணம் என்ன? என்பது இதுவரை விளக்கப்படவில்லை . விலைவாசி உயர்வால் இந்திய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின்யரத்தைப் போக்க வேண்டியது எண்ணெய் நிறுவனங்களின் கடமையாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் அக்கடமையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும் (Oil companies have to fulfill) என்று அவர் அதில் இவ்வாறு கூறியுள்ளார்.