Varisu First Single: விஜய்யின் வாரிசு படத்தின் முதல் ப்ரோமோ ரிலீஸ்

சென்னை: Varisu first single released Tody. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

வம்ஷி பைடிபள்ளியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது குடும்ப பொழுதுபோக்கு படமான வாரிசு குறித்த ஒவ்வொரு அப்டேட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது.

இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து, உடனடியாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஃபர்ஸ்ட் சிங்கிளில் ஆரம்பித்து வசூல் வரை பல ரெக்கார்டுகளை வைத்திருப்பவர் விஜய். சில நேரங்களில் தனது சாதனையை தானே முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.