Chennai Metro Train temporarily suspended: சென்ட்ரல்-ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: Intercorridor movement between Central and Airport is temporarily suspended. சென்னை மெட்ரோ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் பழுதானது. இதன் காரணமாக ஏராளமான பயணிகள் அவதிக்குள்ளாகினர். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் இல்லாமல் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கோயம்பேடு மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் (கிரீன் லைன்) இடையே OHE இல் ஏற்பட்ட கோளாறு காரணமாக. மெட்ரோ ரயில் சேவைகள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் டவுன்லைனில் (சிங்கிள் லைன்) இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் மற்றும் ஏர்போர்ட் இடையேயான இன்டர்காரிடர் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பசுமை வழித்தடத்தில் விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்குப் பயணிக்க பரிமாற்றம் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CMRL தனது பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது மற்றும் சேவைகளை மீட்டெடுக்க எங்கள் குழுக்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுவதால் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றைய அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக காரணங்களுக்காக நேற்று முதல் (நவம்பர் 1ம் தேதி) விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகன பார்க்கிங் வசதி நிறுத்தப்படுவதாகவும், பாஸ் கலாவதி ஆகும் வரை அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே உள்ள பாஸ்களை புதுப்பிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.