Delhi Municipal Corporation election : டெல்லி மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை மாலை நிறைவடைந்தது

புது டெல்லி: The filing of nominations for the Delhi Municipal Corporation elections was completed on Monday evening : டெல்லி மாநகராட்சிக்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மாநகராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால், வேட்பு மனு தாக்கல் கட்டுக்கடங்காத கூட்டத்தில் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒருங்கிணைந்த டெல்லி மாநகராட்சிக்கு டிச. 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிச. 7 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேட்புமனு தாக்கல் கடந்த நவ. 7 – இல் தொடங்கியது.

இந்த நிலையில் மாநகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, 11 பாஜக தலைவர்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர் (11 BJP leaders have joined Aam Aadmi Party). ரோகினியின் வார்டு எண் 53 இல் இருந்து 11 பாஜக தலைவர்கள் இன்று ஆம் ஆத்மியில் இணைந்துள்ளனர். அவர்களின் கடின உழைப்பு பாஜகவில் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் துர்கேஷ் பதக் கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அப்பகுதியில் குப்பை மேலாண்மை (Garbage management) தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் எழுப்பும்போது, ​​அதிகாரிகள் அவர்களை புறக்கணித்தனர் என்றார்.

ஆம் ஆத்மியில் இணைந்த பாஜக தலைவர்களில் முன்னாள் வார்டு துணைத் தலைவர் பூஜா அரோரா (Former Ward Vice President Pooja Arora) மற்றும் மகிளா மோர்ச்சாவின் முன்னாள் துணைத் தலைவர்கள் சித்ரா லம்பா மற்றும் பாவ்னா ஜெயின் ஆகியோர் அடங்குவர். இந்தத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு ரோகினி பகுதியில் இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அவர்.