Delhi BJP to prepare for 2024 Lok Sabha polls: 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் டில்லி பா.ஜ.க.,

புதுடெல்லி: BJP holds meet in Delhi to prepare for 2024 Lok Sabha polls. வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ​​தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு முயற்சிகளையும் ஆலோசனை செய்ததாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளது. இது தவிர, 2023 ஆம் ஆண்டு தேர்தல் நிறைந்த ஆண்டாகும், மேலும் திரிபுரா, மேகாலயா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறலாம்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. 2019 தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று 2019ல் முழுப்பெரும்பான்மை பெற்றிருந்தது. மோடியின் தலைமையில் 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கட்சி நம்பிக்கையில் உள்ளது.

இதனிடையே சிதறி கிடக்கும் எதிர்கட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு தலைவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக, சரத் பவார், மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (பாரத ராஷ்டிர சமிதி என மறுபெயரிடப்பட்டது) தலைவர் கே.சந்திரசேகர் ராவ் போன்ற தலைவர்கள் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு முயன்றனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.