Schools Holiday in Mayiladuthurai: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை : Holiday for schools and colleges in Mayiladuthurai district மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலும் டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பல்வேறு இடங்களில் கனமழை புரட்டிப்போட்டுவிட்டது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏராளமானோர் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஆறு மணி நேர அதீத கனமழையால் 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது மாவட்டம் முழுவதும் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழை நீரில் மூழ்கியுள்ளது. மழைநீர் சேர்ந்து பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதி மக்கள் அரசின் 36 நிவாரண முகாம்களில் 17,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளைச் சேர்ந்த 20,000 மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளிலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் வெள்ளம் சூழந்துள்ளதால், மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இததனையொட்டி மாணவர்களின் நலன் கருதி நாளை (14.11.2022) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.