COVID-19 Vaccination exceeds 207 Crore: நாடு முழுவதும் 207 கோடியை கடந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

புதுடெல்லி: COVID-19 Vaccination exceeds 207 Crore: நாடு முழுவதும் 207 கோடியை கடந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைஇந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 207.03 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 207.03 கோடிக்கும் அதிகமான (2,07,03,71,204) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,74,83,097 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 3.96 கோடிக்கும் அதிகமான (3,96,04,796) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (1,28,261) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.29 சதவீதமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.52 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,539 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,35,35,610.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,047 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,25,081 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 87.81 கோடி (87,88,77,098). வாராந்திரத் தொற்று 4.90 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 4.94 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 198.10 கோடிக்கும் மேற்பட்ட (1,98,10,51,075) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம்   7.09 கோடிக்கும் மேற்பட்ட (7,09,24,890) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

12,751 new cases of corona have been confirmed in the country: நாட்டில் புதிதாக 12,751 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

கடந்த 5-ந் தேதி பாதிப்பு 20,551 ஆக இருந்தது. மறுநாள் 19,406, 7-ந் தேதி 18,738, நேற்று 16,167 ஆக இருந்த நிலையில் 4-வது நாளாக இன்றும் சரிந்தது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16,412 பேர் மீண்டுள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது. தற்போது 1,31,807 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,703 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் மேலும் 42 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,26,772 ஆக உயர்ந்தது.