LPG cylinder price reduced : வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு

தில்லி : Commercial LPG cylinder price reduction : விலைவாசி உயர்வால் அவதியுறும் மக்களுக்கு இன்று புதிய வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை வெளியிடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் நாளாக அமைய உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விலையின்படி, வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 36 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியின் பலன் வணிக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இன்று முதல் தில்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி சிலிண்டர் ரூ .2,012.50க்கு பதிலாக ரூ. 1, 976.50க்கு கிடைக்கும். அதேசமயம் கொல்கத்தாவில் ரூ. 2, 32க்கு பதிலாக ரூ. 2,095.50 கிடைக்கும். இதன் விலை மும்பையில் ரூ.1,936.50 ஆகவும், சென்னையில் (in Chennai) ரூ. 2,141 ஆகவும் குறைந்துள்ளது.

வீட்டு உபயோக எல்பிஜி (Domestic LPG) சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை

ஒருபுறம் வணிக சிலிண்டர்களைப் பயன்படுத்துவோருக்கு நிவாரணம் கிடைத்துள்ள நிலையில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர்கள் ஜூலை 6 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே தொடர்ந்து விநியோகிக்கப்படும். ஜூலை 6 ஆம் தேதி வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தில்லி மற்றும் மும்பையில் (Mumbai) ரூ.1,053, கொல்கத்தாவில் ரூ.1,079, சென்னையில் ரூ.1,068.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று 14.2 கிலோ சிலிண்டர் விலை

மும்பை – ரூ. 1,052.50

தில்லி – ரூ. 1,053

பெங்களூரு – ரூ. 1,055.50

ஜெய்ப்பூர் – ரூ. 1,056.50

போபால் – ரூ. 1,058.50

அகமதாபாத் – ரூ. 1,060

விசாகப்பட்டினம் – ரூ. 1,061

சண்டிகர் – ரூ. 1,062.50

ஆக்ரா – ரூ. 1,065.50

சென்னை – ரூ.1,068.50

டேராடூன் – ரூ. 1,072

கொல்கத்தா – ரூ. 1,079

இந்தூர் – ரூ. 1,081

உதய்பூர் – ரூ. 1,084.50

லக்னோ – ரூ. 1,090.50

திப்ருகர் – ரூ. 1,095

சிம்லா – ரூ. 1,097.50

ராஞ்சி – ரூ. 1,110.50

அந்தமான் – ரூ. 1,129

கன்னியாகுமரி – ரூ. 1,137

பாட்னா – ரூ. 1,142.50

ஸ்ரீநகர் – ரூ, 1,169

இதற்கு முன் எப்போது விலை குறைந்தது?

தேசிய தலைநகர் தில்லியில் ஜூலை 1 ஆம் தேதி 19 கிலோ கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை ரூ. 198 குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் மும்பையில் சிலிண்டருக்கு ரூ.190.50ம், சென்னையில் ரூ.187ம் குறைந்துள்ளது. பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் (Indian Oil), வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது.

இருப்பினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை. எண்ணெய் நிறுவனங்களின் விலை நிவாரணத்தின் நேரடி பலன் வீட்டில் சமைக்க முடியாமல் வெளியில் உள்ள‌ ஹோட்டல்களில் (hotels) உணவு உண்பவர்களுக்கு கிடைக்க உள்ளது. நிகழாண்டு, ஹோட்டல்களில் சாப்பாடு, சப்பாத்தி முதல் பருப்பு, காய்கறிகள் விலை சுமார் ரூ. 350 வரை உயர்த்தப்பட்டது. கமர்ஷியல் காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.