Engineering Certificate verification today: பொறியியல் படிப்புக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: Certificate verification for engineering courses from today: பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்களில் சேர பள்ளிகள் வாயிலாகவும், சிறப்பு மையங்கள் வாயிலாகவும் மாணவர்கள் கடந்த 27நம் தேதி வரை விண்ணப்பித்தனர். மொத்தம் 2 லட்சத்து11 ஆயிரத்து 115 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெ்., படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி வரை இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இதனிடையே சிபிஎஸ்சி 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்திற்குப்பின், கடந்த 22ம் தேதி வெளியானது. இதனையடுத்து பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசத்தை கடந்த 27ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து இன்று முதல் (ஆகஸ்ட் 1ம் தேதி) பொறியியல் படிப்பில் சேர்வோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., பி.ஆர்ச்., படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,11,905 மாணவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு இன்று தொடங்கியது.

இன்று முதல் வரும் 7ம் தேதி வரை விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 2,442 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 250 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 18ம்தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ள உயர் கல்வித்துறை, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.

துணை மருத்துவப் படிப்புக்களுக்கான ஆன்லைன் ஆன்லைன் விண்ணப்பம் (Online Application for Paramedical Courses):
தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மற்றும் 4 சுயநிதி கல்லூரிகள் என 23 கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 19 அரசு கல்லூரிகளில் 2536 இடங்களும், 4 சுயநிதி கல்லூரிகளில் 22,200 இடங்கள் உள்ளன. இதில் 14,157 இடங்கள் அரசு ஒதுக்கீட்டாக உள்ளன. எனவே, தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த அரசு இடங்களின் எண்ணிக்கை 16,693ஆக உள்ளது.

டிப்ளமோ நர்சிங் படிப்பு 25 அரசு கல்லூரிகளில் உள்ளது. இதில் 2060 மாணவர்களுக்கான இடங்களும், இதர 27 துணைநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்காக அரசு கல்லூரிகளில் 8596 இடங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, துணைநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக மட்டுமே மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டுமே 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் http://www.tnhealth.tn.gov.in என்ற இனையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.