53 Lakhs peoples traveled Chennai Metro: சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலையில் மட்டும் 53 லட்சம் பேர் பயணிப்பு


சென்னை: 53.17 lakh people have traveled in the Chennai Metro train: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 53.17 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (Chennai Metro Rail Limited) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்து திட்டமாகும். இத்திட்டம் “சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை” ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் ரயில்கள் தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வழித்தடங்கள் உள்ளன. சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் கொல்கத்தா மெட்ரோ ஆகியவற்றிற்கு பின், இந்தியாவில் 4வது பெரிய மெட்ரோ அமைப்பாகும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), மத்திய, மாநில அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை ரயில் சேவைகள் மாறுபடும். இந்த ரயில் சேவையானது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்கி வந்தன. கடந்த மார்ச் 17ம் தேதி முதல் பயணிகளின் வசதிக்காக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

இந்நிலையி்ல், சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 53.17 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

01.01.2022 முதல் 30.04.2022 வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.05.2022 முதல் 31.05.2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.06.2022 முதல் 30.06.2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.07.2022 முதல் 31.07.2022 வரை மொத்தம் 53,17,659 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 27.07.2022 அன்று 1,97,307 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 27,269 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 16,11,440 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 32,81,792 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ரூ.946.92 கோடி மதிப்பிலான 26 மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில்களை (driverless trains ) தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் (Alstom Transport India Limited) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரயில்கள் கட்டம்-2 மெட்ரோ வழித்தடங்களில் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.