AAP Govt in Delhi Under Threat : தில்லியில் ஆம் ஆத்மி அரசு கவிழும் அபாயம்: தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் எம்எல்ஏக்கள்

CM Arvind Kejriwal : எங்கள் எம்எல்ஏக்களை பாஜக‌ கவர்ந்து இழுக்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் முக்கிய கூட்டம் முதல்வர் இல்லத்தில் கூட்டப்பட்டுள்ளது.

தில்லி: AAP Govt in Delhi Under Threat : முழு நாட்டையும் காவி நிறமாக்க பாஜக பல்வேறு மாநிலங்களில் தனித்துவமான யுக்திகளை தொடர்ந்து பயன்படுத்துகிறது. புதிய உதாரணம், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தது நினைவிருக்கலாம். பீகாரிலும் பாஜக‌ இதுபோல் முயற்சியை செய்தது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இப்போது பாஜகவின் பார்வை தில்லி அரசின் மீது விழுந்துள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எங்கள் எம்எல்ஏக்களை பாஜக தொடர்ந்து தங்கள் பக்கம் இழுக்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் முக்கிய கூட்டத்திற்கு முதல்வர் இல்லத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.

தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக மிரட்டி, கவர்ந்து இழுத்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது (Aam Aadmi Party is blaming). பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டுமே தற்போது எதிர்கட்சியாக இருப்பதால், பாஜக இந்த மாதிரியான ஜனநாயகத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் (Saurabh Bhardwaj) கூறுகையில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக 20 கோடி ரூபாய் வழங்குவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார். தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக ரூ.20 கோடி வழங்கியதாகவும் செய்தியாளர் சந்திப்பை நடத்திய சௌரப் குற்றம் சாட்டினார்.

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங்கும் (National spokesperson and MP Sanjay Singh) இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகா அகாடி அரசை வீழ்த்தி கூட்டணியில் ஆட்சியை பிடித்தது. தற்போது பாஜகவின் பார்வை தில்லி மீது விழுந்துள்ளது. எம்எல்ஏக்கள் பணப்பரிவர்த்தனையை ஏற்காவிட்டால், அவர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு மிரட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். பாஜக இது போன்று எதிர்க்கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடித்து வருவதால், மக்களுக்கு வெறுப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பாஜகவைச் சேர்ந்த கீழ் மட்டத்தலைவர்கள் கவலை கொண்டுள்ளனர்.