Edappadi Palaniswamy : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது: தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

சென்னை : Law and order has broken down in Tamil Nadu :தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் மாநிலத்தில் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த படுகொலை சம்பவங்களுக்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு (Scotland Police)ஈடு இணையாக பேசப்பட்ட காலம் மாறி, தற்போது சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாமல் திறமையற்ற காவல் துறையாக மாறி விட்டது என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு (press release issued by the DGP office): தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் கடந்த 22 ஆம் தேதி 7 கொலைகளும், 23 ஆம் தேதி 5 கொலைகளும் நடைபெற்றுள்ளன. சில கொலைகள் ஆகஸ்ட் மாதத்தில் முன்பு நடந்தவைகளாகும்.

பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனிநபர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நிகழ்ந்தவை. ஜனவரி மாதம் தொடங்கி, ஜூலை மாதம் வரை 940 கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2021 ஆம் ஆண்டின் இதே கால கட்டத்தில் 925 கொலைகள் நடைபெற்றன. கடந்த 4 ஆண்டுகளில் 2019 ஆம் ஆண்டுதான் அதிக்கப்படியான கொலைகள் நடைபெற்றுள்ளன. 2019-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 101 கொலை சம்பவங்கள் குறைவாக (less murders this year) நடைபெற்றுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் அவதூறுகள், பழிசொல்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister M. K. Stalin) தெரிவித்துள்ளார்.