Ganesha idols : தமிழகத்தில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வழிமுறைகள் அறிவிப்பு

சென்னை: Announcement of procedures for desecrating Ganesha idols : விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வதற்கான வழி முறைளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெயிட்டுள்ள செய்தி அறிக்கை (Press release issued by Tamil Nadu Government): விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுபவர்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் கலவையற்றுதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் விசர்ஜனம் செய்ய‌ அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம்.

மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம் (Natural resins of trees can be used). ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்கள் மட்டுமே சிலை தயாரிக்க, பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனச் சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த கந்தசீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சுகலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை அழகுப்படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்கு பதிலாக இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களைக் (Natural materials and natural dyes) கொண்டு செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி, விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.