2,678 people have been infected with Corona: கடந்த 24 மணி நேரத்தில் 2,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

புதுடெல்லி: In the last 24 hours, 2,678 people have been infected with Corona. இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 219.21 கோடியைக் கடந்தது.

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 219.21 கோடிக்கும் அதிகமான (2,19,21,33,244) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன

12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.11 கோடிக்கும் அதிகமான (4,11,19,125) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது..

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26,583 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.06 சதவீதமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,594 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,40,68,557.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,678 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,37,952 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 89.81 கோடி (89,81,15,488) வாராந்திரத் தொற்று 1.07 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.13 சதவீதமாக பதிவாகியுள்ளது.