Bomb threat at Delhi IGI airport: டெல்லி வந்த ரஷ்ய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: Russian airline Aeroflot receives bomb threat, investigation underway at Delhi IGI airport. டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஷ்ய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு (ஐஜிஐ) இன்று காலை ரஷ்ய விமானம் ஏரோஃப்ளோட் எஸ்யூ (232Aeroflot SU 232) வந்திறங்கியது. அப்போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதுகுறித்து விசாரணைக்குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், “விமான நிலையத்தில் எங்கள் விசாரணை நடந்து வருகிறது, அனைத்து பயணிகளும் அவர்களின் லக்கேஜ்களும் சரிபார்க்கப்படுகின்றன. மேலும் விமானம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை எலக்ட்ரானிக் மீடியம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. Aeroflot SU 232 மாஸ்கோவில் இருந்து சரியான நேரத்தில் புறப்பட்டு இன்று அதிகாலை 3:20 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இன்று அதிகாலை 3:20 மணிக்கு மாஸ்கோவில் இருந்து டெர்மினல் 3க்கு (டி3) வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று இரவு 11:15 மணிக்கு அழைப்பு வந்தது. விமானம் எண் SU232 ஓடுபாதை 29 இல் தரையிறங்கியது,” என்று அதிகாரி கூறினார்.

மேலும் டெல்லி போலீசார் தரப்பில், “வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமானத்திலிருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். விமானம் சோதனை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செப்டம்பர் 10ம் தேதி, லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு 10.30 மணியளவில், டெல்லியின் ரன்ஹோலா காவல் நிலையத்தின் லேண்ட்லைனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 9/11 தாக்குதல்களின் அடிப்படையில் அமெரிக்கா, லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் தகர்க்கப்படும் என தெரிவித்ததாக என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.