25 people dead in Pauri Garhwal bus accident: உத்தரகாண்ட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி

பவுரி கர்வால்: 25 people dead in Pauri Garhwal bus accident. உத்தரகண்ட் மாநிலம் துமகோட்டின் பிரோகல் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு நடந்த பவுரி கர்வால் பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள சிம்டி கிராமத்திற்கு அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 45 முதல் 50 பேர் ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்த்தில் விழுந்து விபத்துக்குள்ளானது காவல்துறை மற்றும் SDRF இணைந்து 21 பேரை இரவோடு இரவாகக் காப்பாற்றியதுடன், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்உகூறினார்.

இதுகுறித்து டிஜிபி கூறுகையில், “துமகோட்டின் பிரோகல் பகுதியில் நேற்று இரவு நடந்த பவுரி கர்வால் பேருந்து விபத்தில் 25 பேர் இறந்து கிடந்தனர். காவல்துறை மற்றும் SDRF இரவோடு இரவாக 21 பேரை மீட்டனர்; காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார்.

மேலும் ஹரித்வார் எஸ்பி சிட்டி ஸ்வதந்த்ர குமார் சிங் “இங்கிருந்து லால்தாங்கில் இருந்து ஒரு பேருந்தில் ஒரு திருமண ஊர்வலம் புறப்பட்டுச் சென்றது; விபத்து ஏற்பட்டது. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தகவல் எடுக்கப்பட்டு வருகிறது. பௌரி காவல்துறை மற்றும் SDRF மூலம் அந்த இடத்தில் மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று கூறினார். .

மேலும் “பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 40-42 பேர் பேருந்தில் இருந்தனர். நாங்கள் பவுரி காவல்துறை மற்றும் கிராம மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இதுவரை 15-16 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இறப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இன்னும் பெறப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்த விபத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.