Covid-19 precautionary dose : கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இடைவெளி குறைப்பு

Union Health Ministry : க‌ரோனா பூஸ்டர் தடுப்பூசி விநியோகத்தை எளிதாக்க கோவின் செல்லிடப்பேசி செயலியில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தில்லி: Covid-19 precautionary dose : நாட்டில் நாள்தோறும் தொடர்ந்து க‌ரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது, மேலும் கரோனாவின் நான்காவது அலையின் வருமோ என்ற அச்சம் தலை தூக்கியுள்ளது. எனவே, கரோனாவின் பாதிப்பை தடுப்பதில் தடுப்பூசியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அறிவியல் ரீதியான‌ ஆய்வுகளின் ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்க உத்தரவிட்டுள்ளது.

வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள் மற்றும் உலகளாவிய நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு, “நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின்” (NTGI) “நிலை தொழில்நுட்ப துணைக் குழு” (STSC) 2-வது கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இடைவெளியை தற்போதைய நடைமுறையில் உள்ள கால அவகாசத்தை குறைத்துள்ளது. 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் என்றிருந்ததை, 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்ல, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களுக்கு 2-வது முறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு, 3-வது முறையாக‌ கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கரோனா பூஸ்டர் தடுப்பூசி விநியோகத்தை எளிதாக்க கோவின் செல்லிடப்பேசி செயலியில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டு, இது தொடர்பாக‌ பரவலாக விளம்பரப்படுத்தப்படும். பூஸ்டர் தடுப்பூசியின் பயனை அனைவரும் பெருவதற்கான‌ ஆதரவை பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.