Rajya Sabha Nominees : மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக‌ தென்னிந்தியர்கள் வீரேந்திர ஹெக்டே, இளையராஜா, பி.டி. உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு

தில்லி: (Dharmasthala Veerendra Heggade Ilayaraja pt usha): மாநிலங்கள நியமன உறுப்பினர்களாக‌ கர்நாடகாவின் வீரேந்திர ஹெக்டே, தமிழ்நாட்டின் இளையராஜா, கேரளாவின் பி.டி. உஷா, ஆந்திராவின் விஜயேந்திரா உள்ளிட்ட தென்னிந்தியர்கள் மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய‌ப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். கர்நாடகாவின் டி.வீரேந்திர ஹெக்கடே, தமிழ்நாட்டின் இளையராஜா, ஆந்திரப் பிரதேசத்தின் வி.விஜயேந்திர பிரசாத் மற்றும் கேரளாவின் பி.டி.உஷா ஆகியோர் நியமனம் செய்ய‌ப்பட்டதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மாநிலங்களவையில் வலுப்பெற்றுள்ளது.

கர்நாடகாவின் தென் கன்னட‌ மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா கோவிலின் தர்மதிகாரியும், சிறந்த சமூக சேவகருமான டி.வீரேந்திர ஹெக்கடே மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியும், 1,400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம், பண்டிட் ரவிசங்கர், லதா மங்கேஷ்கர் போன்ற புகழ்பெற்ற இசைத் துறையில் பணியாற்றிவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

இளையராஜாவின் படைப்பாற்றல் பாராட்டியுள்ள பிரதமர் மோடி, “அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது. அவர் அடிமட்டத்தின் பின்னணியில் இருந்து உயர்ந்து பெரிய அளவில் சாதித்துள்ளார் என்று நியமனம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முனைவர் வீரேந்திர ஹெககடே பற்றி, பிரதமர் மோடியின் பதிவு, “வீரேந்திர ஹெக்டே ஜி சிறந்த சமூக சேவை செய்வதில் முன்னணியில் உள்ளார். தர்மஸ்தலா கோவிலில் பணிகள், சுகாதாரம், கல்வி மற்றும் கலாசசாரம் ஆகியவற்றில் அவர் செய்து வரும் மகத்தான பணிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அவர் நிச்சயமாக நாடாளுமன்ற‌ நடவடிக்கைகளை செழுமைப்படுத்துவார். தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்கள் மூலம் தர்மத்திற்காக முனைவர் ஹெக்கடேவின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளைப் பற்றி படிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.

திரைக்கதை எழுத்தாளர் வி விஜயேந்திர பிரசாத்தின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “அவரது படைப்புகள் இந்தியாவின் புகழ்பெற்ற கலாசாரத்தை வெளிப்படுத்துவதோடு, உலகளவில் முத்திரை பதித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில், ‘இந்திய தடகளத்தின் தங்கப் பெண்’ மற்றும் முன்னாள் ஒலிம்பியனான பி.டி. உஷா ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம் என்று பிரதமர் பாராட்டியுள்ளார். மேலும் “விளையாட்டுகளில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகின்றன, ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் செய்த பணி பாராட்டத்தக்கது என்று அவர்களது நியமனத்திற்கு பிரதமர் மோடி சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.