TN Chief Minister M. K. Stalin : முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதி

2 நாள்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை: admitted to a private hospital : கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமை படுத்திக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி தனியார் மருத்துவமனையில் (private hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவக் கண்காணிப்பு மற்றும் மருத்துவப்பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனை (medical examination) செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாக‌ கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.

2 நாள்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு (M.K. Stalin) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், உடல் சோர்வுற்றிருந்ததால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

எனவே அனைவரும் முககவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். கரோனாவிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டு வர வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி, மதிமுகவைச் சேர்ந்த வைகோ உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா (Corona) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைந்து குணம் பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.