Chola era Shiva temple missing : கர்நாடகத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் காணவில்லை: பொன்.மாணிக்கவேல் புகார்

Ancient temple : கோயில் மற்றும் திருடப்பட்ட சிலைகளை கர்நாடக அரசுடன் இணைந்து தேட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை: Chola era Shiva temple missing : கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் காணவில்லை என்று முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் அமைச்சர் சேகர்பாபுவுக்கு (Minister Shekhar Babu) எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் குனிகல் அருகே கோட்டேகிரி என்ற கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகே உள்ள அரசமரத்தடியில் பழமையான கருங்கல் பலகை கண்டெடுக்கப்பட்டது. அது ராஜராஜ சோழனின் முதல் பேரனான ஸ்ரீ உடையார் ராஜாதி ராஜ சோழனால் பொறிக்கப்பட்டதாகும். பழங்கால கிரந்த எழுத்துகளை கொண்டுள்ள இந்த கல்வெட்டு மூலம் பல வரலாற்று தகவல்கள் கிடைத்துள்ளன.

கோட்டேகிரி என்ற கிராமத்தில் முன்பு ராஜேந்திர சோழீஸ்வரம் என்ற பெயரில் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 949 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் (Ancient temple), தற்போது காணவில்லை. அதிலிருந்த சிலைகள் திருடப்பட்டுள்ளன. கோயில் மற்றும் திருடப்பட்ட சிலைகளை கர்நாடக அரசுடன் இணைந்து தேட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசமரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட கருங்கல் பலகையை தமிழகத்திற்கு கொண்டு வந்து அரிய பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் தும்கூரு மாவட்டம் மட்டுமின்றி, பெங்களூரு அல்சூரு உள்ளிட்ட இடங்களில் சோழர் காலத்து கல்வெட்டுகள் பல உள்ளன. அதனை தமிழக அரசு (Tamil Nadu Government) மீட்டு பாதுகாக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Also Read : New house collapsed : குடி புகுவதற்கு 6 நாட்களுக்கு முன் மலை மண் சரிந்து புது வீடு இடிந்தது

Also Read : Ranil Wickremesinghe : இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

Chola era Shiva temple missing