School and Colleges Holiday : மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Heavy rain : கனமழைபெய்து வருவதால், மும்பை, புணே உள்ளிட்ட நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

Image Credit : Twitter.

புணே: Heavy rain in Maharashra :மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் புணே உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த 2 வாரமாக தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக மகராஷ்டிரா (Maharashra), குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் பலர் வீடு, பயிர் உள்ப‌ட‌ சொத்துகளை இழந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் உயிரிழப்பும் நேருகிறது.

மகராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை (Heavy rain) பெய்து வருவதால், மும்பை, புணே உள்ளிட்ட நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாசிக்கில் உள்ள தரை பாலம் வெள்ளத்தால் மூழ்கி உள்ளது. மும்பைக்கு குடிநீரை வழங்கும் மோதக்சாகர் ஏரி நிரம்பி வழிகிறது. வசை பகுதியில் நிலச்சரிவு (Landslide) ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தொடர் கனமழை பெய்யும் என்பதால், புணே உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (Holiday for Schools and Colletes) அளிக்கப்பட்டுள்ளது. கன மழையால் அம்மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும், நிவாரணப்பணிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.