Interesting Facts About Guava: கொய்யாப்பழத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

கொய்யா (Guava) வைட்டமின் சி நிறைந்த பழம். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உண்பதால் இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரை அளவு, செரிமான அமைப்பு மற்றும் எடை இழப்புக்கு நன்மை பயக்கும். இந்த ஆரோக்கிய நன்மைகள் தவிர, கொய்யாவில் அதிக ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன .

கொய்யாப்பழத்தில் அன்னாசிப்பழத்தை விட 4 மடங்கு அதிக நார்ச்சத்து உள்ளது. இதில் ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு வைட்டமின் சி உள்ளது. ஆண்டுதோரும் இந்தியாவில் சுமார் 27 ஆயிரம் டன் இளஞ்சிவப்பு கொய்யாப்பழம் விளைகிறது. பருவநிலை மாற்றத்தால் கொய்யா சாகுபடியில் தற்போது இழப்பு ஏற்படுகிறது. சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக விளைச்சல் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது.

கொய்யாப்பழத்தின் தோற்றம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. மத்திய அமெரிக்கா அல்லது தெற்கு மெக்சிகோ மக்கள் கொய்யா தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என்று கூறுகின்றனர். ஒரு சில தகவல்களின்படி, வட மற்றும் தென் அமெரிக்கா உள்பட போர்த்துகீசியர்கள் கிழக்கிந்திய தீவுகளுக்கு கொய்யாவைக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் கொய்யாவை ஒரு பயிராக ஏற்றுக்கொண்டனர். பின்னர் கொய்யா எகிப்து முதல் பிரான்ஸ் நாட்டின் கடற்கரை பகுதிகளுக்கு விளைவிக்க கொண்டு செல்லப்பட்டன.

பிலிப்பைன்ஸ் புராணங்களில் கொய்யா தொடர்பான ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. கொய்யா ஒரு தடை செய்யப்பட்ட பழமாக கருதப்பட்டதாக பிலிப்பைன்ஸ் புராணங்களில் கூறப்பட்டுள்ள‌து. ஒரு சிறுவன் பிச்சைக்காரனுக்கு உணவளிக்க விரும்பினான், அவனிடம் சாப்பிடக்கூடாத பழமான கொய்யா இருந்தது. சிறுவன் வன தெய்வங்களை வேண்டினான். அவனுடைய வேண்டுதலுக்கு வன தெய்வங்கள் கவரப்பட்டு கொய்யாவை விரும்பத்தக்க பழமாக மாற்றியதாக ஒரு கதையும் உள்ளது.

கொலம்பியாவில், கொய்யாப்பழம் பசை மற்றும் பாலாடைக்கட்டியால் செய்யப்படும் ஒரு உணவை பெரும்பாலானவர்கள் மிகவும் சுவைத்து உண்ணும் உணவாக உள்ளது. கொலம்பியாவில் இது ரொட்டியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில், அவை சுவையான உணவுகளின் ஒரு பகுதியாக உண்ணப்படுகின்றன. கொய்யா புட்டுகள், ஜாம்கள் மற்றும் பிற வடிவங்களில் உட்கொள்ளப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொய்யா நீரிழிவு உள்ளிட்டவைகளுக்கு சிறந்தெனக் கூறப்படுகிறது.