Monkeypox in Delhi : தில்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

தில்லியில் வசிக்கும் 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லி: One person with monkeypox in Delhi : இந்தியத் தலைநகர் தில்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திருப்பிய 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு (Monkeypox for 3 people in kerala) ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் குரங்கு அம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கருத்தப்பட்டது. ஆனால் தில்லியில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு (One person with monkeypox in Delhi) ஏற்பட்டுள்ளது.

தில்லியில் வசிக்கும் 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாமல் (Without going to any foreign country), தில்லியிலேயே தங்கி இருந்த இவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட அந்த நபரை, தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் நினைவு மருத்துவமனையில் (Maulana Azad Memorial Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காய்ச்சலும், உடலில் புண்களும் கண்டறியப்பட்டது.

தற்போது கேரள மாநிலத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3 பேர் உள்பட தில்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய அளவில் 4 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை (Health Department)தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.