பெங்களூரு: Masks are again mandatory in the state due to corona scare : முகக் கவசம் கட்டாயம்: கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மாநிலத்தில் கரோனா தொற்றின் அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே, மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் அச்சம் காரணமாக, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி, மாநில அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கரோனா கட்டுப்பாட்டுக் கூட்டத்தை நடத்திய சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், மாநிலத்தில் காரோனா தொற்றின் பாதிப்பு, அதை தடுப்பது குறித்து விவாதித்தார்.
கரோனா கட்டுப்பாட்டுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் (Minister K. Sudhakar), கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினோம். மாநிலத்தில் கரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும். மேலும், மக்களின் நலன் கருதி இனிமேல் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். மாநிலத்தில் கரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது, மேலும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை தாமாகவெ முன்வந்து எடுத்துக்கொள்வதன் மூலம் தொற்றுக்கு எதிராக அதிக பாதுகாப்பைப் பெறுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களின் நன்மைக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்கு அம்மை (Monkey Pox) தொற்று குறித்தும் பேசினார். இன்று நடைபெற்ற கரோனா கட்டுப்பாட்டு கூட்டத்தில் குரங்கு நோய் தொற்று குறித்து விவாதித்தோம். மாநிலத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பால் யாரும் பாதிக்கபடவில்லை. கர்நாடகாவில் குரங்கு அம்மை தொற்று அதிகரிக்காமல் தடுக்க அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் (Kerala) குரங்கு அம்மை தொற்றின் பாதிப்பு உள்ளது. எனவே, எல்லையோர மாவட்டங்களில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் கர்நாடகாவில் குரங்கு அம்மை தொற்றின் பாதிப்பு ஏற்படாத வகையில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எதுவும் பதிவாகவில்லை என்றாலும், விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கிரீனிங், அறிகுறி பரிசோதனை மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எங்கள் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எச்1என்1 (Malaria, Dengue, Chikungunya and H1N1) பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் ஆலோசனைகளின் படி, தொற்று நோய் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி மழைக்காலத்தில் ஏற்படும் மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து தகவல் சேகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.



