Special Business Loan Camp: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்

சேலம்: Special Business Loan Camp for Micro, Small and Medium Enterprises: சேலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வரும் 17ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் பாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சேலம் கிளை, ஸ்ரீ லட்சுமி காம்ப்ளக்ஸ், முதல் தளம், 4172, ஓமலூர் மெயின் ரோடு, ஸ்வர்ணரி, சேலம் 636 004 அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் வரும் 1.08.2022 முதல் 02.09.2022 வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு 94443 96850, 94443 96809 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

விடுதி நிருவாகிகள் தங்களது பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை 30.082022-க்குள் பதிவு செய்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய கோரிக்கை
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மாணவ, மாணவியர்க்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லம் Tamil Nadu Hostels & Hones for Women and Children (Regulation) Act 2014-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்தவற்கு htps://inswp.com என்ற இணையதள போர்ட்டல் மூலம் அறக்கட்டளை பதிவு பத்திரம் (Trust Doed), சொந்த கட்டிடம் / வாடகை ஒப்பந்த பத்திரம் (Rental Agreellent), கட்டிட வரைபடம் (Blue Print), கட்டிட உறுதிச்சான்று (Building License Stability), தியணைப்பு துறையின் தடையில்லா சான்று (Fire Certificate) மற்றும் சுகாதாரச் சான்று (Sunitory) உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

விடுதி நிருவாகிகள் தங்களது விடுதி மற்றும் இல்லங்களை பதிவு செய்திட மேற்காணும் ஆவணங்களுடன் இணையதள போர்ட்டல் மூலம் 30.08.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிருவாகிகள் மீது காவல் துறையின் மூலம் வழக்குப் பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.