Enforcement Raid: சென்னை தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை

சென்னை: Enforcement Search in Chennai: சென்னை தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு உத்தரவை மீறுவதாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னை கிளை அலுவலகம்-I, சென்னை 600 113 இன் அதிகாரிகள் குழு இன்று மாலை 11.08.2022 M/s ராசி எலெக்ட்ரோட்ஸ் லிமிடெட், உப்பரபாளையம் கிராமம், ரெட்ஹில்ஸ், சென்னை-600052 நிறுவனத்தில், தரக்கட்டுப்பாட்டு உத்தரவை மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் பெயரில், அமலாக்க சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

வெல்டிங்கில் பயன்படுத்தப்படும் ஃப்ளக்ஸ் கோர்டு (குழாய்) மின்முனைகள்[Flux Cored (Tubular) Electrodes ” BIS இன் கட்டாய சான்றிதழின் கீழ் உள்ளது. தரக் கட்டுப்பாட்டு ஆணை (QCO ) அறிவிக்கப் பட்ட தேதிக்குப் பிறகு, BIS லிருந்து உரிமம் பெறப்பட்ட செல்லுபடியாகும் சான்றிதழ் தவிர, வேறு எந்த நபரும் QCO வின் கீழ் உள்ள எந்தப் பொருளையும் தர முத்திரையின்றி உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகிக்கவோ, விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ, சேமிக்கவோ அல்லது விற்பனைக்குக் காட்சிப்படுத்தவோ முடியாது. சோதனையின் போது இந்த ​​நிறுவனம் BIS இலிருந்து செல்லுபடியாகும் உரிமத்தைப் பெறாமல் Flux Cored (Tubular) Electrodes களை இறக்குமதி செய்து/விற்பனை செய்து வந்தது கவனிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட விதிகளை மீறிய சுமார் 193 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

BIS SRO, CNBO-II, சென்னை ஆல் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ருபாய் 2,00,000/- ற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும். Section 29 of BIS Act, 2016 இல் கூறப்பட்டுள்ளபடி, பொருளின் மதிப்பை போல பத்து மடங்கு அல்லது BIS Standard Mark முத்திரையிடப்பட்ட தயாரிக்கப்பட்ட /விற்பனை செய்யப்பட்ட பொருள்களுக்கான மதிப்பிற்கு அபராதம் விதிக்கப்படும்.

எனவே ISI முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், BIS தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். BIS CARE APP செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ கூட இத்தகைய புகார்கள் செய்யப்படலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.

மேலும் தகவலுக்கு, BIS SRO சென்னை அலுவலகத்தை தொலைபேசி எண்: 044-2254 1984 இல் தொடர்பு கொள்ளவும். BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் eBIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உங்களுக்கு உதவும்.