Minister K.Sudhakar : 2025-ஆம் ஆண்டுக்குள் மலேரியா இல்லாத மாநிலமாக கர்நாடகம் ஆக்கப்படும்: அமைச்சர் கே. சுதாகர்

பெங்களூரு: Malaria free Karnataka by 2025 : 2025-ஆம் ஆண்டுக்குள் மலேரியா இல்லாத மாநிலமாக கர்நாடகம் ஆக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் தெரிவித்தார்.

பெங்களூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2030-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை (Malaria) ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மலேரியா மற்றும் பிற தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம்.

முன்பெல்லாம் மலேரியாவை பரிசோதனை செய்ய முறையான‌ வசதிகள் இல்லை, 1980 முதல் 1990 வரை யாருக்கேனும் தொடர்ந்து காய்ச்சல் வந்தால், மலேரியாவை பரிசோதிக்க ஆரம்பித்தோம். சமூகங்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற சோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் (awareness programs), பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. எந்தவொரு நோயையும் எதிர்த்துப் போராட, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.

2020-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 1,86,532 பேருக்கு மலேரியா பாதித்ததாக‌ கண்டறியப்பட்டது .அதில் கர்நாடகாவில் 1,701 பேருக்கு மட்டுமே மலேரியா பாதிப்பு இருந்த‌து, இது தேசிய அளவில் மலேரியா பாதிக்கப்பட்டவர்களில் 0.9 சதவீதமாகும்.பொதுவாக, மழைக்காலத்தில் மலேரியா மற்றும் டெங்கு malaria and dengue during monsoon) பாதிக்கப்படுவது அதிகரிக்கும், தற்போது கர்நாடகாவின் 13 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்து வருகிறது. மழையால், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், டயர்கள், காலி தேங்காய் மட்டைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி, மலேரியா உள்ளிட்ட‌ நோய்களை பரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மழைக்காலம் சவாலான காலம் என்பதால் மலேரியாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது .கடந்த 6 மாதங்களில் 100 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பருவமழை ஒரு சவாலான காலம் (Monsoon is a challenging time) மற்றும் தென் கன்னடம் மற்றும் உடுப்பியில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைக் காணமுடிகிறது. காடுகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் மலேரியா பாதிப்பு அதிகரித்து வருவதை காணமுடிகிறது என்றார்.