ICSE Class 10th result declares today: ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : தேர்வு முடிவுகள் results.cisce.org இல் பதிவிறக்கம் செய்யவும்

இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) 10-ஆம் வகுப்பு 2022 தேர்வுகளில் பங்கேற்ற‌ மாணவர்கள் தேர்வின் முடிவுக்காக‌ காத்திருப்பு இன்று நிறைவு பெறுகிறது. காரணம் தேர்வு முடிவுகள் இன்று (Sunday, July 17) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என வாரியம் அறிவித்துள்ளது. ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. முடிவுகள்.cisce.org ஐப் பதிவிறக்கம் செய்யவும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பட்டியலை cisce.org அல்லது results.cisce.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (CISCE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அறிவிப்பிற்காக‌ லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மாணவர்களின் காத்திருப்பு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களைச் சரிபார்ப்பதற்கு, அவர்களது சேர்க்கை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவை அவசியம்.

இது குறித்து தேர்வுகளின் தலைமை நிர்வாகி மற்றும் செயலாளரான ஜெர்ரி அராத்தூன் கூறுகையில், முதல் செமஸ்டர் மற்றும் இரண்டாம் செமஸ்டர் (First Semester and Second Semester) ஆகியவை இறுதி மதிப்பெண்ணுக்குள் வர சமமான வாய்ப்பு வழங்கப்படும். முதல் செமஸ்டர் மற்றும் இரண்டாம் செமஸ்டர் தேர்வுக்கு வராத மாணவ‌ர்களுக்கு ஆப்சென்ட் எனக் குறிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது என்றார்.

ICSE (10 ஆம் வகுப்பு), 2022 தேர்வு முடிவுகள் ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு அறிவிக்கப்படும். முடிவுகள் CISCE இன் கேரியர்ஸ் போர்ட்டல் (CAREERS portal), இணையதளத்திலும், குறுஞ்செய்தி SMS மூலமாகவும் கிடைக்கும் என்று இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளின் (CISCE) தலைமை நிர்வாகி மற்றும் செயலாளரான அரத்தூன் தெரிவித்தார்.

“ICSE தேர்வு முடிவுகளை கணக்கிடுவதற்கு, முதல் செமஸ்டர் மற்றும் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகளுக்கு சம வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது. முதல் செமஸ்டர் மற்றும் இரண்டாம் செமஸ்டர் மற்றும் ப்ராஜெக்ட் (உள் மதிப்பீடு) மதிப்பெண்கள் ஒவ்வொரு பாடத்தின் தாளிலும் இறுதி மதிப்பெண்களை சேர்க்கப்படுகின்றன.

ICSE 10-ஆம் வகுப்பு முடிவுகள் 2022: மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வதற்கான படிகள்:

CAREERS போர்ட்டலில்– www.cisce.org இல் CISCE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

  • முகப்புப் பக்கத்தில், ICSE Class 10 Result 2022 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • தனிப்பட்ட அடையாள எண், பிறந்த தேதி போன்ற உள்நுழைவு சான்றுகளை பதிவிடவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் ICSE 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் திரையில் காட்டப்படும்.
  • முடிவைப் பதிவிறக்கம் செய்து, எதிர்கால தேவைக்காக அதை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.