Tamil Nadu festival : நாளை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு விழா

சென்னை : Chief Minister M.K. Stalin will attend : தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு தின விழா திங்கள்கிழமை (ஜூலை18) காலை 11.30 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேரூரையாற்றுகிறார்.

தமிழ்நாடு நாள் விழாவில் கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் (செய்தி மக்கள் தொடர்புத் துறைசார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. முன்னதாக காலை 9.00 மணிக்கு மணியளவில் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் (State Planning Commission Vice Chairman) முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கு நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கில் தமிழக வரலாறு குறித்து சமூகநீதி ஆய்வு (ம‌) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் “தமிழ்நாடு உருவான வரலாறு” (History of formation of Tamil Nadu), ஆழி செந்தில்நாதனின் “பொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்”, வாலாசா வல்லவனின்”தமிழகத்திற்காக உயிர் கொடுத்த தியாகிகள்”, முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் ” தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டிய தனயன்” சட்டப்பேரவை உறுப்பினர், மருத்துவர் நா.எழிலன் ” முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு” ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகின்றனர்.

இவ்விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகள்
தமிழ் வளர்ச்சித் துறை (Department of Tamil Development) சார்பில் இலக்கியமணி விருது 2021, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது 2021, கபிலர் விருது 2021, உ.வே.சா விருது 2021, அம்மா இலக்கிய விருது 2021, காரைக்கால் அம்மையார் விருது 2021 ஆகிய விருதுகள் வழங்கப்படும். தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரையும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை உரையும் ஆற்ற உள்ளனர்.

தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல் பொருள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்ச நல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களும் (Antiquities) காட்சிப் படுத்த‌ப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு நில அளவைத் துறை சென்னை மாகாண‌த்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைப் படங்களை காட்சிப்படுத்தப் பட உள்ளன‌. தமிழ்நாடு தின விழா வரலாறு மற்றும் தமிழ்நாடு தின மன்றத்தின் சிறப்புத் தீர்மானம் குறித்து பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் அடங்கிய புத்தகம் செய்திப் பக்கங்கள் தொடர்புத் துறையின் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் (Marina Beach) ஒடிசாவின் பிரபல சிற்பி பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்கின் தமிழ்நாடு தின சிறப்பு மணல் சிற்பம் உருவாக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் தமிழ்நாடு தின சிறப்பு சிற்பமும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காக சுலைவாணர் அரங்கில் சிறப்பு கண்காட்சியும் (Special Exhibition) நிறுவப்பட்டுள்ளது. இளைஞர்கள் ஆராய்வதற்காக ஜூலை 16 முதல் 20 வரை இது காட்சிப்படுத்தப்படும். இந்த விழாவில்அமைச்சர்கள். எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு கேபிள் டிவியிலும் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.