Minister M. Subramanian : தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 380 பேர்பாதிப்பு: அமைச்சர் மா.சுப்ரமண்யன்

தஞ்சாவூர் : 380 people affected by swine flu in Tamil Nadu : தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளன‌ர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ( எச்1 என்1) பாதிக்கப்பட்ட வர்களுக்கும், பருவநிலை மாற்றங்களால் (Due to climate change) ஏற்படுகிற காய்ச்சலுக்கும் தீவிர சிகிச்சை எனகிற வகையில் 11 நாள்களுக்கு முன்பு ஒரேநாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இதேபோல, தஞ்சாவூர் மாவட் டத்தில் 11 நாள்களில் 1,488 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டன . மேலும், 915 பள்ளிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றன. முகாமில் இதுவரை 68,848 பேருக்கு கண்டறியும் பணி நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 17 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளார். மற்றவர்கள் குணமடைந்து நலமு டன் இருக்கிறார்கள். மாவட்டத்தில் உயிரிழப்பு பூஜ்ஜிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் 380 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் (380 people have been affected by swine flu in Tamil Nadu). மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 17 பேர். மீதமுள்ளவர்கள் வீடுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3அல்லது 4 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.

காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம். பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு என்பதால், தமிழ்நாடு முழுவதும் இம்முகாம்கள்களை நடத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி , நாள்தோறும் 1,000 முதல் 1,500 முகாம்கள் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் 12 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியதன்படி, தடுப்பூசிகள் போட்டப்பட்டு வருகின்றன (as per Union government directives to vaccinate children above 12 years of age in schools). இதன் விளைவாக, தமிழகத்தில் 90 சதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்றார் அவர்.