Rs.4 lakh Subsidy for Agricultural machinery repair center: ரூ.4 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திர பழுதுநீக்கும் மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல்: Applications are welcome for setting up an agricultural machinery repair center with a grant of Rs.4 lakh. ரூ.4 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திர பழுதுநீக்கும் மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் பராமரிப்பு மையம்” மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுதுநீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8.00 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்டகிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாயகுழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையிலுள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) அவர்களால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்தத் தொகையினை செலுத்தி வாங்கிக் கொdiளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) மையத்தினை நேரில் ஆய்வுசெய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையினை பயனாளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களைப் பெற்றிட நாமக்கல் மாவட்ட விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை வேளாண்மைவிரிவாக்கமையம் சிவில் சப்ளைஸ் கிடங்குபின்புறம் அண்ணாமலைநகர் வசந்தபுரம் அஞ்சல் திருச்சிமெயின் ரோடு நாமக்கல் – 600002 போன் – 04286-2900804

உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை 294-1/11 காவேரிகார்டன் பெட்ரோல் பங்க் பின்புறம் சேலம் மெயின் ரோடு திருச்செங்கோடு- 637 211 போன் – 04288-290517 ஆகிய வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.