Prime Minister Narendra Modi : பிரதமர் நரேந்திர மோடியின் நவராத்திரி கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

இந்துத்வா உணர்வாளரும், கடவுள் பக்தருமான பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), நவராத்திரியை சிறப்புற கொண்டாடி வருகிறார்.

புதுடெல்லி: நவராத்திரி தொடங்கி ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன. நவராத்திரி இந்துக்களுக்கு ஒரு சிறந்த‌ பண்டிகை. துர்கா தேவியை வழிபடுவதன் மூலம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்துத்வா உணர்வாளரும், கடவுள் பக்தருமான பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுகிறார். துர்கா தேவி மற்றும் காலபைரவரின் பக்தரான மோடி, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தனது 41 வது வயதில் இருந்து நவராத்திரி விழாவை கொண்டாடத் தொடங்கினார். இன்று வரை ஒன்பது நாட்கள் கடுமையான உண்ணாவிரதத்தை அவர் மேற்கொள்கிறார். மஹாளய அமாவாசை நாளில் இருந்து விரதத்தைத் தொடங்கி நவராத்திரியின் ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது துர்கா பூஜை மற்றும் ஆயுத பூஜையை மோடி தவறவிடுவதில்லை. அவர் நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு பயணமாக இருந்தாலும் சரி, நவராத்திரி விரதத்தை தவறாமல் கடைப்பிடிப்பார். ஒன்பது நாட்கள் விரதம் இருந்து, உணவு உட்கொள்வதை தவிர்க்கிறார். அவர் எலுமிச்சை சர்பத் அல்லது இளநீர் மற்றும் தண்ணீரை மட்டுமே உட்கொள்வதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. நவராத்திரியின் விஜயதசமி அன்று மாலை பூஜையை முடித்த பிறகுதான் மோடி உணவை உட்கொள்கிறார்.

குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகோ, அல்லது நாட்டின் பிரதமரான பிறகோ, பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கவில்லை. மாறாக நான்கரை தசாப்தங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்(He has been fasting for four and a half decades). உண்ணாவிரதத்தின் போது அவரின் வழக்கமான, நடைமுறை அல்லது வழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. உண்ணாவிரதம் அவரின் அனைத்து தினசரி பணிகள், திட்டங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவ‌தில்லை. 72 வயதிலும் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிப்பது அவரின் உறுதியான மனதிடத்தையும், பக்தியையும் காட்டுகிறது.