TNPSC Recruitment: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

சென்னை: Tamil Nadu Public Service Commission (TNPSC) has Announced for the recruitment of Field Surveyor, Draftsman & Surveyor cum Asst Draftsman Vacancy. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) நில அளவர், வரைவாளர் மற்றும் அளவர் மற்றும் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டைமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தை செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நிரந்தர பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

காலிப்பணியிடங்கள்:

முக்கிய தேதிகள்:

வயது வரம்பு (01.07.2022 அன்றுள்ளபடி):

கல்வித் தகுதி (29.07.2022 அன்றுள்ளபடி):

தமிழ் மொழியில் தகுதி: விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி சான்றிதழ்: பணி நியமனத்திற்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம் மற்றுமு் உடற்தகுதி சான்றிதழ்களை தனது நியமன அலுவலரிடம் பணியில் சேரும் போது சமர்ப்பிக்க வேண்டும். தேர்விற்கு வரும் கண்பார்வை குறைபாடுடைய விண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்த அரசு கண் மருத்துவ நிபுணரிடம் (Specialist) கண்பார்வைத் தகுதிச் சான்றிதழை பெற்று நியமன அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்: நிரந்திரப் பதிவுக்கட்ணம்: ரூ.150 செலுத்த வேண்டும். ஏற்கெனவே செலுத்தியிருந்தால் 5 ஆண்டுகளுக்கு பதிவுக்கட்ணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

தேர்வுக் கட்டணம்: தேர்வுக்கட்ணத்திற்கு சலுகை பெறும் விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர் மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை: தேர்வுக் கட்டணம் ரூ.100/-ஐ (ரூபாய் நூறு மட்டும்) இணையவழியில் (இணைய வங்கி, பற்று அட்டை , கடன் அட்டை) விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதிநாளிற்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் சேவைக் கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களின் கட்டணச் சலுகைக்கான தகுதியின் அடிப்படையில்தான் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற முடியும்.

இணையவழியில் தேர்வுக் கட்டணம் செலுத்தாமல், நேரடியாக செலுத்தும் வரைவு காசோலை, அஞ்சலக காசோலை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிரந்தர பதிவு செய்யும் முறையில் பதிவு செய்து பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தி பதிவு ID பெற்றவர்கள் நிரந்தர பதிவுக் கட்டணத்தைச் (அதாவது ரூ.150/-) செலுத்தத் தேவையில்லை. தேர்வுக் கட்டணம் செலுத்தினால் போதும்.

தேர்வுக் கட்டணச் சலுகை கோரும் விண்ணப்பதாரர்களைத் தவிர ஏற்கனவே நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவு முறையில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இந்த நிரந்தரப் பதிவு இப்பதவிக்குரிய தேர்வுக் கட்டணமாக கருதப்படமாட்டாது.

மேலும் விபரங்கள் அறியவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx என்ற முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.