Today is International Friends Day : இன்று உலக நண்பர்கள் தினம், இந்தியாவில் நண்பர்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? சுவையான‌ தகவல்.

இன்று சர்வதேச நண்பர்கள் தினம். ஆனால் இன்று இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதில்லை ( But India is not celebrating today ). ஆகஸ்ட் முதல் ஞாயிறுக்கிழமை, அதாவது, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும், நண்பர்கள் தினத்தை இந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடி வருகின்றனர். நட்பு என்பது ஒரு இனிமையான உறவு. நமக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்குத் தீர்வு நம் நண்பர்களிடம் இருக்கும் என்பது பலமான நம்பிக்கை. மகிழ்ச்சியிலும், துக்கத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் நம் நண்பர்கள் நம் குடும்பத்தைப் போலவே நம்முடன் இருக்கிறார்கள்.

நட்பு எனப்படும் நல்ல உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 ஆம் தேதி சர்வதேச நண்பர்கள் தினம் (30th July is International Friends Day) கொண்டாடப்படுகிறது. நட்பின் பந்தம் என்பது இயற்கையில் மிகவும் தூய்மையானது, ரத்த உறவு இல்லை என்றாலும், அது அன்பால் பின்னி பிணைந்தது. ஜாதி, மதம், நிறம், மொழி, இனம், கலாசாரம், நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நட்பின் வலுவான பிணைப்பையும் அன்பின் முக்கியத்துவத்தையும் கொண்டாடுவதை காட்டுவதற்காக‌ இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை (United Nations) ஜூலை 30 ஆம் தேதியை “சர்வதேச நண்பர்கள் தினம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறுக்கிழமையை இந்தியாவில் நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில், நண்பர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஒரு நட்பு பேண்டு அல்லது ராக்கி கயிறை போல வற்றை கட்டி, நாம் எப்போதும் சிறந்த நண்பர்களாக இருப்போம் என்று உறுதியளிக்கிறார்கள்.

முதல் சர்வதேச நண்பர்கள் தினம்

சர்வதேச நண்பர்கள் தினம் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி (30th July 1958) பராகுவேயில் கொண்டாடப்பட்டது. தேசிய நட்பு தினம் 1930 களில் ஹால்மார்க் கார்டுகளுக்கான சந்தைப்படுத்தல் உத்தியாக உருவானது. அதன் நிறுவனர் ஜாய்ஸ் ஹால். உங்களுக்கு நெருக்கமான நபர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நீங்கள் அவர்களைப் பற்றி நினைக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த ஒரு அட்டையை அனுப்பும் மார்க்கெட்டிங் உத்தியாக இது தொடங்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸால் அதிகாரப்பூர்வ விடுமுறையை அறிவிக்க வழி வகுத்தது. பின்னர் டாக்டர் ரமோன் ஆர்டெமியோ பிராச்சோ (Dr. Ramon Artemio Bracho) 1958 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதிய‌ன்று உலக நண்பர்கள் தினத்தை கொண்டாடத் தொடங்கினார். பின்னர் 2011 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூலை 30 ஆம் தேதியை சர்வதேச நட்பு தினமாக அறிவித்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்குப் பிறகும், சில நாடுகளில் இது வெவ்வேறு மாதங்களில் மற்றும் வெவ்வேறு நாட்களில் நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும், இந்த சிறப்பு நாள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது (It is celebrated on different dates in different countries). இந்தியாவும், மலேசியாவும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினத்தைக் கொண்டாடுகின்றன. அதே சமயம் ஓஹியோவின் ஓபர்லினில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 9 ஆம் தேதியை கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இந்த நாள் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய புராணங்களைப் பார்த்தால், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனுக்கும், கிருஷ்ணனுக்கும் சுதாமாவுக்கும், கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும், கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையிலான சிறந்த நட்பை நாம் கொண்டாடுகிறோம்.