TN CM M.K.Stalin : நாடாளுமன்றத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சென்னை: Parliament is denied the opportunity to speak on important issues : நாடாளுமன்றத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.


மலையாள மனோரமா செய்தி நிறுவனம் நடத்திய மாநாட்டு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு அவர் பேசியது: மலையாள மனோரமா நாளிதழ் அதிக வாசகர்களை கொண்ட இதழாக உள்ளது. இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, அந்த நிறுவனம் நடத்தும் கருத்தரங்கில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது.இன்னும் பல நூறாண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க கூட்டாட்சி மதசார்பின்மை, சமத்துவம், சோசியலிசம் (Secularism, Equality, Socialism) ஆகியவற்றை தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். இதனை காப்பாற்றினால்தான் இந்தியாவையும் காப்பாற்ற முடியும்.

75 ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவது வெறும் கொண்டாட்டமாக இருக்காமல் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருபபதற்கு சிந்திக்க வேண்டும். இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழ் மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான நீண்ட உறவு உள்ளது. இந்தியாவின் மீக நிண்ட வரலாறு மக்களின் சகோதரத்துவ உணர்வு நாட்டை காக்கும். ஒரே நாடு ஒரே மொழி என்போர் கூட்டாட்சி தத்துவத்தை கொண்ட இந்திய நாட்டின் எதிரிகள் எனக் கூறலாம். அதிகாரம் பொருந்திய மாநிலங்கள் என்பது இந்தியாவின் பலவீனம் என்று கருத்தக்கூடாது. அதுதான் பலம் என்பதனை உணரவேண்டும்.

இந்தியாவில் ஒரே மொழி, ஒரே மதம் என்பது சாத்தியம் இல்லாதது (One language, one religion is not possible). இந்தியாவிற்கு ஜனநாயகமே பொருத்தமானது என ஜவகர்லால் நேரு அன்றே சொன்னார். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழி வாரி மாநிலங்களை ஏற்படுத்தி கொடுத்தார். இந்தி ஒரு போதும் திணிக்கப்படாது என உறுதிமொழி அளித்தார். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 9.22 சதவீதம். இது நாட்டிற்கு பலன் கிடைக்கிறது. இந்தியா கூட்டாட்சி கோடபாட்டை மதித்து நடக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக நடக்கின்றன. மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளது மாநில அரசுகள் தான். மக்களின் அன்றாட தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவது மாநில அரசு தான்.கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு நடக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது (Parliament is denied the opportunity to speak on important issues). மக்கள் பிரச்னைகள், கருத்துகளை சொல்ல நாடாளுமன்றத்தில் எம்.பிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. பேசியதற்காக அவர்கள் தற்காலிகமாக‌ நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தான் இன்றைய இந்தியாவின் நிலைமை. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். அனைத்து மாநிலங்களை ஒருங்கிணைத்துச் செல்வதே, நாட்டை காப்பதாக அமையும் என்றார். மேலும் நிகழ்ச்சியில் மலையாள மொழியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசை ஒன்றிய அரசு என தாம் அழைப்பதற்கான காரணத்தையும் விளக்கி பேசினார்.