Staff Selection Commission Recruitment: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

புதுடெல்லி: Staff Selection Commission has published Notification for Sub-Inspector Examination: மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (STAFF SELECTION COMMISSION) தென் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) வெளியிட்டுள்ளது.

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் பதவிக்கு, வெளிப்படையான போட்டித் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்களாவர்.

பதவி, வயதுவரம்பு, குறைந்தபட்ச கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விரிவான தகவல்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் வளைதளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி 30.08.2022 (பிற்பகல் 23:00மணி) மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 31.08.2022 (பிற்பகல் 23:00 மணி) ஆகும். ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும்.

தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தேர்வு நவம்பர் 2022ல், கீழ்க்காணும் 21 மையங்கள்/நகரங்களில் நடைபெறும்: ஆந்திரபிரதேசத்தில் 10 மையங்கள், தமிழ்நாட்டில் 7 மையங்கள், புதுச்சேரியில் ஒரு மையம் மற்றும் தெலங்கானாவில் 3 மையங்களில் நடைபெறும் என மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (STAFF SELECTION COMMISSION) தென் மண்டல இயக்குனர் கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை (12ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:
சென்னை: Private sector employment camp coming up on 12th in Chennai: சென்னையில் வரும் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ , கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையாளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.