Former Chief Minister B.S. Yeddyurappa : கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கான உறுதி ஏற்பு : முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா

மத்திராலயா: Commitment to bring back BJP rule in Karnataka : கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கான உறுதியை ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மத்திராலயத்திற்கு (Mantirālayam)தனது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்த முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் அந்த மடத்தில் மடாதிபதி சுபுதேந்திரா சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது : கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கான உறுதியை ஏற்றுக் கொண்டுள்ளேன். அதற்காக ராகவேந்திரர் கோவிலுக்கு வந்த ஆசீர்வாதம் பெற்றுள்ளேன். மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றப்படுவார் என்று கூறுவதில் உண்மை இல்லை. சட்டப்பேரவைத் தேர்தல் அருகில் உள்ளதால், சிலர் வேண்டுமென்றே இது போன்ற வதந்தியை கிளப்பி வருகின்றனர். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை கூட்டுத் தலைமையில் சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளது.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு கட்சி எனக்கு உரிய கௌரவத்தை தந்துள்ளது. பாஜகவிலிருந்து எனக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை. இதனால் கட்சிக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக மீண்டும் மாநிலத்தில் பாஜகவை அமர்த்துவேன். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஷிகாரிபுரா தொகுதியில் எனது மகன் விஜயேந்திராவிற்கு (My son Vijayendra in Shikaripura constituency) பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும்படி கட்சியின் மேலிடத்தலைவர்களிடன் கேட்டுள்ளேன். அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டால், விஜயேந்திர ஷிகாரிபுரா தொகுதியிலிருந்து போட்டி இடுவார் என்றார்.

முன்னதாக புதன்கிழமை இரவு மத்ராலயத்திற்கு வந்த பி.எஸ்.எடியூரப்பா, வியாழக்கிழமை ராகவேந்திரர் கோவிலில் நடைபெற்ற குரு ராகவேந்திரர் ஆராதனையில் கலந்து கொண்டார். முதலில் கிராமக் கடவுள் மஞ்சாளம்மாவை தரிசனம் செய்து வழிபட்டார். அதனைத் தொடர்ந்து ராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு சென்று வழிபட்டார். பின்னர் மத்ராலயத்தின் மடாதிபதி சுபுதேந்திராவை சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் அவரது மகனும் எம்பியுமான ராகவேந்திரா, மற்றொரு மகன் விஜயேந்திரா (MP Raghavendra, another son is Vijayendra) உள்ளிட்ட குடும்பத்தினர் வந்து ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகளிலிருந்து ஆபரேஷன் தாமரை திட்டத்தின் மூலம் 17 எம் எல் ஏக்கள் ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டனர். இதனையடுத்து பெரும்பான்மை இழந்த கூட்டணி அரசின் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, எடியூரப்பாவிடமிருந்து முதல்வர் பதவியை பறித்த பாஜக மேலிடம், பசவராஜ் பொம்மையை (Basavaraj Bommai) முதல்வராக அமர்த்தியது.

அவரது ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாகவும், மதக்கலவரங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்புகளாக பாஜகவிற்கு மாநிலத்தில் மக்களிடம் ஆதரவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மந்தராலாவிற்கு சென்ற முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, கர்நாடகத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த முடிவு (Commitment to bring back BJP rule in Karnataka) செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடகத் தேர்தலில் அவரது பிரசாரம் எந்த அளவிற்கு பாஜகவின் பலத்தை உயர்த்தும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.