Free training for TNPSC Group-1 exam: சேலத்தில் வரும் 8ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயற்சி

சேலம்; Free training for TNPSC Group-1 exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 8ம் தேதி நடைபெறுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் (Salem District Collector) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணிக் காலியிடங்களுக்கான தொகுதி 1 தேர்வு (TNPSC Group-1 exam) அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு www.tnpsc.tn..gov.in என்ற இணையதளத்தில் நேற்று வரை (2.08.2022) விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக 08.08.2022 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

மேலும், இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 0427 2401750 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC Group – 1 பதவிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி (Youth Skill Development Training):
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் (Salem District Collector) கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இளைஞர் திறன் திருவிழா (Youth Skill Development Training) தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சித் (DDU GKY) திட்டத்தின்கீழ் 2022-3 ஆண்டில் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயிற்சியளிக்கும் அரசு துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தவும் மற்றும் இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களை பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறும் வகையில் இளைஞர் திறன் திருவிழா வருகின்ற 05.08.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்திற்குட்பட்ட இராமலிங்கபுரம் சகியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேதாஜி கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவில் 19 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர் மற்றும் இளைதிகள் குறைந்தபட்ச தகுதியான 5 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர் மற்றும் இளைதிகள் இத்திறன் திருவிழாவில் கலந்து கொண்டு தேவையான திறன் பயிற்சியினை பெற்று தகுதியான வேலை வாய்ப்புகளை அடைந்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொன்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.