Young India office sealed : யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல்

தில்லி: Enforcement Department seals Young India office : நேஷனல் ஹெரால்டு வழக்கில் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வரும் யங் இந்தியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது. சீல் வைக்கப்பட்டிருக்கும் அலுவலக வாயிலில் அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில் அமலாக்கத்துறையின் முன் அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை யாரும் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை யங் இந்தியா நிறுவனத்தின் அலுவலகத்தை பூட்டி அமலாக்கத்துறையினர் சீல் (Enforcement Department seals Young India office) வைத்தனர்.

வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் (பிஎம்எல் ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடும் அசோசியட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றதாக பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்ரமண்யசுவாமி (Subramania swamy) வழக்கு தொடர்ந்தார். அமலாக்கத்துறையும் இது தொடர்பாக வேறு ஒரு வழக்கை பதிந்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உள்பட 11 இடங்களில் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர். பல்வேறு நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் குற்றவியல் பிரிவின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்க செய்ய உள்ள நிலையில் இன்று சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் சோனியாகாந்தியிடம் (Sonia Gandhi) அமலாக்கத்துறையினர் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். ராகுல் காந்தியிடம் (Rahul Gandhi) 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.

யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டத்தையடுத்து தில்லி இலக்கம் 10, ஜன்பத் சாலையில்உள்ள சோனியாகாந்தியின் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பான சூழ்நிலை உள்ளது. எனவே அவர்கள் இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான ராகுல்காந்தி கர்நாடகத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் 75 வது பிறந்த நாளையொட்டி (On the occasion of Siddaramaiah’s 75th birthday) தாவணகெரேயில் நடைபெறும் சித்தராமையா திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் தில்லிக்கு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியினர் முடிவெடுப்பார்கள் என கூறப்படுகிறது. சோனியா, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தேசிய அளவில் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.