Sub-counseling for BE, B.Tech: பிஇ., பி.டெக் படிப்புகளுக்கு வரும் 9ம் தேதி துணை கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சென்னை: Sub-counseling for BE, B.Tech courses on 9th. தமிழகத்தில் பிஇ., பி.டெக் படிப்புகளுக்கு வரும் 9ம் தேதி துணை கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பொறியியல் பி.இ./பி.டெக். மாணாக்கர் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வு 09.11.2022 அன்று வெளியிடப்பட உள்ளது.

சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 ஆம் வகுப்பு பொது (Academic) மற்றும் தொழிற்கல்வி (Vocational) பயின்ற. தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணாக்கர்களும் இந்த துணைக்கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் மாணாக்கர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.

மாணாக்கர்கள் 09.11.2022 அன்று வெளியிடப்பட உள்ள துணைக்கலந்தாய்வு அறிவிக்கையினை தொடர்ந்து, விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக 09.11.2022 – ம் தேதி முதல் 13,11.2022 – ம் தேதி வரை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி, மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.