Scholarship for ex-servicemen students: முன்னாள் படைவீர்கள் சார்ந்த மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: Applications are invited to get scholarship for ex-servicemen students of Salem district. சேலம் மாவட்ட முன்னாள் படைவீர்கள் சார்ந்த மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர், கைம்பெண்கள் மற்றும் சிறார்கள் சைனிக் பள்ளியில் (Sainik School) பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ. 25000/- ஊக்கத் தொகையாக 23.09.2022 முதல் இத்தொகை வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு கல்வியாண்டு 2022-2023 முதல் முன்னாள் படைவீர் சிறார்களுக்கு IITs, IIMs & National Law Schools போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 23.09.2022 முதல் உயர் கல்வி பயில்வதற்கு ஊக்கத் தொகையாக ஆண்டிற்கு ரூ.50,000/- வழங்கிட குழுகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கல்வியுதவி தொகை வழங்கிட தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் (Domicile) அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள (Personnel Below Officer Rank) முன்னாள் படைவீரர்கள் (Hony.Commissioned Officers உட்பட). உயர் கல்வியில் ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள படிப்புகளுக்கு சேரும் போது முன்னாள் படைவீரரின் மகன்களுக்கு 25 வயதிற்குள்ளும் மகள்களுக்கு திருமணம் ஆகும் வரையும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் கைம்பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இவ்வுதவித்தொகை 2022–2023 ஆம் கல்வி ஆண்டு முதல் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் 0427-2902903 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.