Temple Robbery: சிக்கமகளூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதிக்கு சென்ற திருடர்கள் இரவு நேரத்தில் முன் கதவு பூட்டை உடைந்து உள்ளே சென்று அஷ்டலட்சுமி கோவிலில் இருந்த மூன்று உண்டியல்களையும் உடைத்து ஒரு பெட்சிட்டை விரித்து அதில் உண்டியல் பணங்களை கொட்டி எடுத்துச் சென்றுள்ளனர் மேலும் கோவில் கருவறையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர் சிருங்கேரி சாரதம்மன் மடத்திற்கு உட்பட்ட கோயில் என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடாதிபதி கொடுத்த நகை அனைத்தும் திருட்டுப் போய் உள்ளது தெரியவந்துள்ளது சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை அழைத்துச் சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது நிரந்தரமாக இந்த பகுதியில் திருட்டு நடந்து வருவதால் ஏதாவது கும்பல்கள் ஊருக்கு வந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்
Also Read: கார் மரத்தில் மோதி விபத்து அதிர்ஸ்டவசமாக தப்பிய ஓட்டனர்



