Wild Elephant: கும்கி யானைகள் மூலம் ஒற்றை காட்டு யானையை சிறை பிடித்த வனதுறையினர்

Forest Department captures single wild elephant using Kumki elephants
Image credit/News Next Tamil

Wild Elephant: சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகாவில் ஹாசன் மாவட்டம் சர்கலேஸ்புரா சுற்றுவட்டாரத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்து முடிகெரெ தாலுகா முழுவதும் பல இடங்களில் வனப்பகுதி காப்பி தோட்டம் போன்றவற்றில் சுற்றி திரிந்தன அதில் ஆல்தூர் அருகே ஒற்றை ஆண் யானை குட்டி ஒன்று கூட்டத்திலிருந்து தனிமையில் பிரிந்தது சுற்று வட்டாரத்தில் இருந்த காப்பி தோட்டங்களுக்கும் மற்றும் வனப்பகுதிக்கும் தனிமையாக சென்று ஊருக்குள்ளும் சென்று வந்த நிலையில் குடகு மாவட்டம் துபாராவில் இருந்து கொண்டுவரப்பட்ட பீமா ஏகலவ்யா தனஞ்செய் மகேந்திரா தலைமையில் இந்த யானையை பிடிப்பதற்கு கொண்டுவரப்பட்டிருந்தது யானை பாகன்கள் மூலம் சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து நேற்று மாலை 7 மணி அளவில் ஆந்தி அருகே தனிமையில் இருந்த யானையை பீமா அலை மற்றும் பல யானைகள் மடக்கி ஒன்று சேர்ந்து பிடித்தனர் அதற்கு காலில் செயின் போட்டபடி கூட்டி வந்தனர் பின்னர் மற்ற யானைகளை பார்த்தவுடன் அதுவும் அமைதியாகிவிட்டது அங்கிருந்து லாரி மூலம் ஏற்றி சென்று சிமோகா சக்கரேபயலு யானைகள் பாதுகாப்பு மையத்தில் விடுவதாக தெரிவித்தனர் யானையை பிடித்ததை அடுத்து கிராமத்தில் நிம்மதி அடைந்தனர் இதில் பல சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர் இருப்பினும் மீதம் உள்ள காட்டு யானைகள் நிரந்தரமாக அந்த பகுதியில் வருவதால் அவைகளை ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது