Swamiji cheated : புதையல் இருப்பதாக நம்ப வைத்து தம்பதியை ஏமாற்றிய திருட்டு சாமியார்

லட்சக்கணக்கில் பணம் மோசடி: இரும்பு சிலையை தங்கப் பூச்சு பூசி, சந்திர கவுடா தோட்டத்தில் புதைத்த மஞ்சுநாத், பின்னர் சந்திர கவுடாவிடம் வந்து, உங்கள் தோட்டத்தில் புதையல் இருப்பதாக கூறினார்.

ஹாசன்:cheated lakhs of money : சொத்துக்காக பல கொலை வழக்குகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். புதையலுக்காக குழந்தைகளை பலி கொடுப்பது, உயிரை பணயம் வைத்து புதையல் தேடுவது என ஏராளமான சம்பவங்கள் அன்றாட வாழ்வில் நடந்து வருகின்றன. ஹாசன் மாவட்டம், அரகலகூடு வட்டத்தில் உள்ள தொட்டமகே கிராமத்தில், புதையல் ஆசையை காட்டி, திருட்டு சாமியார், தம்பதியை ஏமாற்றிய சம்பவம் நடைபெற்றது.

வீட்டின் தோட்டத்தில் புதையல் இருப்பதாக தம்பதியை நம்ப வைத்து ஏமாற்றிய‌ திருட்டு சாமியார் மஞ்சுநாத் என்கிற மஞ்சே கவுடா (Manje Gowda alias Manjunath) என்பவர் சந்திர கவுடா தம்பதியினரை மோசடி செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து அரகலகூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சந்திர கவுடாவின் மகன் புனித் தெரிவித்துள்ளார்.

இரும்பு சிலையை தங்கப் பூச்சு பூசி (Coat the iron idol with gold), சந்திர கவுடா தோட்டத்தில் புதைத்த மஞ்சுநாத், பின்னர் சந்திர கவுடாவிடம் வந்து, உங்கள் தோட்டத்தில் புதையல் இருப்பதாக கூறினார். சாமியாரின் வார்த்தைகளை நம்பிய சந்திர கவுடா இரவில் புதையல் தேடத் தொடங்கினார். தோண்டிய போது அங்கு தங்கச் சிலைக்கு பதிலாக இரும்பு சிலை கண்டெடுக்கப்பட்டது. சந்திர கவுடா குடும்பத்தினர் தங்கச் சிலையைப் பெறுவதற்காக திருட்டு சாமியாருக்கு லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்திருந்தனர்.

கிடைத்தது தங்க சிலை இல்லை, இரும்பு சிலை என்பதை அறிந்த சந்திர கவுடா குடும்பத்தினர் திருட்டு சாமியாரைத் தேடி உள்ளனர். இதனை அறிந்த திருட்டு சாமியார் மஞ்சுநாத் தங்கி இருந்த தொட்டஹள்ளி என்கிற‌ கிராமத்தை விட்டு தப்பியோடிவிட்டார். வழக்கு பதிந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர் (The police have registered a case and are actively looking for him).